மேட்டூர் அணை நீர்மட்டம் 5 மாதத்துக்கு பின் 110 அடிக்கு கீழ் குறைந்தது

0 800

நீர்வரத்து சரிந்து, பாசனத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்னீர் திறப்பால், மேட்டூர் அணை நீர்மட்டம் 5 மாதத்திற்கு பின்பு 110 அடிக்கு கீழ் குறைந்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ம் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. அதற்கு முன்னதாக நீர்மட்டம் 90 அடியாக இருந்த போதே டெல்டா பாசனத்துக்காக ஆகஸ்ட் மாதம் 13 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகரித்த நீர்வரத்தால் நீர்மட்டம் 41 நாட்கள் 120 அடியாக நீடித்தது. இந்தநிலையில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 882 கனஅடியாக சரிந்த நிலையில், 5 மாதத்திற்கு பின் நீர்மட்டம் 110 அடிக்கு கீழ் குறைந்தது. டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 109.45 அடியாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments