ஷிரடி சாய்பாபா கோவில் நாளை முதல் மூடப்படுகிறதா?
ஷிரடி சாய்பாபாவின் பிறப்பிடம் பத்ரி (pathri) என்று கூறிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நாளை முதல் ஷீர்டி சாய்பாபா கோவிலை மூடி எதிர்ப்புத் தெரிவிக்க கோவில் அறக்கட்டளை உறுப்பினர்களிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாகவே ஷீர்டி சாய்பாபாவின் பிறப்பிடம் குறித்த சர்ச்சை இருந்து வரும் நிலையில் பத்ரிதான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்று கூறி அதனை புனிதத் தலமாக வளர்க்க சிவசேனா முயன்று வருகிறது.
பத்ரியின் வளர்ச்சிப்பணிகளுக்காக உத்தவ் தாக்கரே100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு ஷிர்டி அறக்கட்டளை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாய்பாபா சந்நிதான அறக்கட்டளை உறுப்பினர் வாக்சாவரே (Wakchaure), ஊர்மக்களை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
Comments