காணும் பொங்கலை முன்னிட்டு உற்சாகமாக நடைபெற்ற எருது விடும் விழா

0 967

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எருது விடும் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆதமங்கலம்புதூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில், 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அலங்காரத்துடன் சீறி பாய்ந்த காளைகளை, 2000-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு அடக்க முயன்றனர்.

 சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள ரெட்டியூர் மாரியம்மன் கோயிலிலும் எருதாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதிலும், உதைத்ததிலும் வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர். பார்வையாளர்கள் கூட்டத்தை நோக்கிப் காளைகள் பாய்ந்து தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர்.

 இதேபோன்று, தர்மபுரி மாவட்டத்தின் கடகத்தூரில் நடைபெற்ற வித்தியாசமான எருது விடும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments