புல்லட் ரயிலைப் போல் ஹைப்பர் லூப் திட்டமும் கைவிடப்படும்?
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை கிடப்பில் போட சிவசேனா அரசு முடிவு செய்த நிலையில், ஹைப்பர் லூப் திட்டமும் நிறுத்தப்படும் என மகாராஷ்டிர நிதியமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்படும் ஹைப்பர் லூப் திட்டத்தை கிடப்பில் போடப்படும் என சூசகமாகத் தெரிவித்தார். மும்பையில் இருந்து புனேக்கு இடையிலான மூன்றரை நேர பயணத்தை இத்திட்டம் 25 நிமிடங்களுக்கு குறைக்கும்.
உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்தை மும்பையில் தொடங்குவதற்கு தேவேந்திர பத்னாவிஸ் அரசு திட்டமிட்டது. ஆனால் இது உலகில் வேறு எங்காவது தொடங்கட்டும் என்றும், 10 கிலோமீட்டராவது வெற்றிகரமாக ஓடினால் அதுபற்றி பின்னர் நாம் பரிசீலிக்கலாம் என்று அஜித்பவார் கூறினார்.
Comments