NPR பதிவேட்டு விண்ணப்பத்தில் பெற்றோரின் பிறப்பிடத்தை தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை - மத்திய அரசு
தேசிய மக்கட் தொகை பதிவேட்டு விண்ணப்பத்தில் பெற்றோரின் பிறப்பிடத்தை தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கணக்கெடுப்பின் போது எந்த ஆதாரத்தையும் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் மக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் விவரங்களே போதுமானவை என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணியின் போது பெற்றோரின் பிறப்பிடம் குறித்த கேள்வியை நீக்குமாறு பதிவாளர் ஜெனரலிடம் பாஜக அல்லாத பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, பெற்றோர் பிறப்பிடம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயமில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மக்கட் தொகை பதிவேடு பணியை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
Comments