மும்பை - அகமதாபாத் இடையேயான தேஜஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் குஜராத் முதலமைச்சர்

0 814

மும்பை - அகமதாபாத் இடையேயான தேஜஸ் ரெயில் சேவையை, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ள, தேஜஸ் ரயில் தனது வணிக ரீதியிலான பயணத்தை நாளை முதல் தொடங்குகிறது. அகமதாபாத்தில் இருந்து காலை 6 நாற்பது மணிக்கு புறப்படும் தேஜஸ் ரயில், மதியம் 1 பத்துக்கு மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் மும்பை சென்டிரலில் இருந்து பிற்பகல் 3 மணி 40 நிமிடங்களுக்கு புறப்பட்டு, இரவு 9 மணி ஐம்பத்தைந்து நிமிடங்களுக்கு அகமதாபாத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments