ஆந்திர மாநில அரசு தலைநகரை மாற்ற முடிவு
ஆந்திராவின் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றும் பணியில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதிக்க ஜெகன்மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் விசாகப்பட்டினத்தில் தான் நடைபெறும் என்றும், அங்குள்ள ராமகிருஷ்ணா கடற்கரை சாலையில் ஆளுநர் தேசியக் கொடி ஏற்றுவார் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, அமராவதியில் இருந்து தலைநகரை மாற்றும் முடிவை கைவிடக் கோரி கூட்டு நடவடிக்கைக் குழு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
Comments