குடியுரிமை திருத்த சட்டம்: ராகுல்காந்திக்கு பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி. நட்டா சவால்

0 877

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் ராகுல்காந்தியால், அந்த சட்டம் பற்றி 10 வாக்கியங்களையாவது பேச முடியுமா என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் புத்த அமைப்பின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அந்த சட்டத்தால் என்ன பிரச்சனை என்பதை 2 வாக்கியங்களில் ராகுல்காந்தி தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல்காந்தி நாட்டு மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது என்றும் அவர் கேட்டுகொண்டார். மதரீதியில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்தியா காந்தி ஆகியோர் ஆதரவு அளித்தனர் என்றும் நட்டா தெவித்தார்.

காங்கிரஸ், இடதுசாரிகள் வாக்கு வங்கியை மனதில் வைத்து செயல்படுவதாக நட்டா குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments