ஆஸ்திரேலியா டென்னிஸ் போட்டி : இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சானியா மிர்சா ஜோடி

0 765

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.

அந்நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து விளையாடி வருகிறார்.

இந்த போட்டியின் அரையிறுதி சுற்றில் தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை, சானியா மிர்சா ஜோடி சந்தித்தது. ஆக்ரோஷமாக விளையாடிய சானியா ஜோடி, எதிரணியை 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் வென்றது.

இதன் மூலம் சானியா மிர்சா ஜோடி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குழந்தை பெற்ற பிறகு களம் இறங்கியுள்ள சானியா மிர்சா, அவர் விளையாடும் முதல் தொடரிலேயே கோப்பையை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments