அமெரிக்காவுடன் போரை தவிர்க்க ஈரான் விரும்புகிறது -அதிபர் ஹசன் ரவுகானி
ராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்க்கும் முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார்.
ஈரான் ராணுவ படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் அரசு தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி, ‘ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீதான தாக்குதல், ஈரான் ராணுவ படைத்தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு இழப்பீடு என கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
ராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். இது தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் சாத்திக்கூறுகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments