நடிகை ரஷ்மிகா வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது ரூ.25 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்

0 1482

பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக் பார்ட்டி என்ற கன்னடப் படம் மூலம் அறிமுகமாகி குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் ரஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்திலும் நடித்து வருகிறார்.

குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் உள்ள ராஷ்மிகா மந்தனாவின் வீட்டிலும் அவரது தந்தையின் திருமண மண்டபத்திலும் நேற்று சோதனையிட்ட 10க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் அவரது வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

அப்போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்மிகாவின் பெற்றோரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தங்கள் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை அவர்களால் அளிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments