அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசுக்கு சொந்தமான "தி வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிக்கையை கடுமையாக சாடிய பாஜக

0 1510

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசுக்கு சொந்தமான தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையை பாஜக கடுமையாக சாடியுள்ளது.

இந்தியா குறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிடும் செய்திகளில் நிறைய பிரச்சனைகள் இருப்பதாக, பாஜகவின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் Vijay Chauthaiwale கூறியுள்ளார்.

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் செய்திக் கொள்கை பாரபட்சமானதாகவும், உள்நோக்கம் கொண்டதாகவும் உள்ளது என அவர் சாடியுள்ளார்.

அமேசான் நிறுவனத்தை தாம் எதிர்க்கவில்லை என்றும், இந்தியா வந்துள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அமெரிக்கா திரும்பியவுடன் இந்தியாவைப் பற்றிய தம்முடைய கருத்தை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு சொல்ல வேண்டும் என்றும் Vijay Chauthaiwale கூறியுள்ளார்.

இந்தியா தனிச்சிறப்பு வாய்ந்த நாடு என்றும், 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என்றும் ஜெஃப் பெசோஸ் நேற்று கூறியிருந்தை குறிக்கும் வகையில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments