தேசிய மக்கள்தொகை பதிவேடு, மக்கள்தொகை கணக்கெடுப்பில் பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து ஆலோசனை

0 693

தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் ஆலோசனை நடத்தினார்.

மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான இயக்குநர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேற்குவங்க அரசு மட்டும் இந்த கூட்டத்தை புறக்கணித்துவிட்டது. அம்மாநில அரசின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.

ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை தேசிய மக்கள்தொகை பதிவேடு விவரங்கள் திரட்டப்படுவதோடு, மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது.

இதற்காக பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதோடு, மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments