காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி

0 808

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

வில்சன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்சன் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்த்தாண்டத்தில் உள்ள வில்சனின் வீட்டுக்குச் சென்ற தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், எம்.எல்.ஏ.க்கள் மனோ தங்கராஜ், ஆஸ்டின் ஆகியோர் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரியிடம் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments