வடகொரியாவில் பியாங்யாங் பூங்காவில் மீண்டும் திரையரங்கு திறப்பு
வடகொரிய தலைநகர் பியாங்யாங் பூங்காவில் திறந்தவெளி திரையரங்கு மீண்டும் திறக்கப்பட்டிருப்பதை அந்நாட்டு மக்கள் நடனமாடியும், பாட்டு பாடியும் கொண்டாடினர்.
மோரன் ஹில்ஸ் பகுதியில் உள்ள இளைஞர் பூங்காவில் புதுப்பிக்கும் பணிக்காக மூடப்பட்டிருந்த திரையரங்கு, பணி முடிவடைந்ததால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அத்திரையரங்கில் சுமார் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதிகளும், நவீன ஒலி, ஒளி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. திரையரங்கு திறப்பு விழாவையொட்டி கண்கவரும் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.
Comments