அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டன தீர்மானம் - ஜனவரி 21ஆம் தேதி விசாரணை
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டன தீர்மானத்தின் மீது அந்நாட்டு செனட் சபையில், வரும் 21ஆம் தேதி விசாரணை தொடங்குகிறது.
வரும் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராகக் கூடிய வாய்ப்புள்ளவர் ஜோ பிடன். ஒரு நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் ஜோ பிடன் மீது விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசை டிரம்ப் நிர்ப்பந்தித்தார் என்பது குற்றச்சாட்டு. இதையடுத்து, டிரம்ப் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளை ஜனநாயகக் கட்சி மேற்கொண்டது.
இந்த கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் ஏற்கெனவே நிறைவேறிவிட்டது. தற்போது செனட் சபைக்கு வந்துள்ள இந்த தீர்மானத்தின் மீது வரும் 21ஆம் தேதி விசாரணை தொடங்குகிறது. இதற்காக செனட் சபை உறுப்பினர்கள் 100 பேரும் நடுவர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்னிலையில், பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துவதாக அவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.
Comments