தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அடிப்படையான சேவைகள் மூலம் ஈட்டும் வருவாயை மட்டும் கணக்கிட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு உரிம கட்டணம் செலுத்தி வந்தன.
செல்போன் விற்பனை, டிவிடென்ட் உள்ளிட்ட பிற வருவாய்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது மத்திய அரசு கொண்டுவந்த புதிய வருவாய் பங்கீட்டு முறை. இதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
2004 முதல் 2015ஆம் ஆண்டு காலகட்டத்திற்கான இந்த தொகையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, ஏர்டெல், வோடபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. இந்த மறுஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Comments