இந்தியா-ஜப்பான் கடலோர காவல் படையினரின் கூட்டுப் பயிற்சி சென்னையில் தொடக்கம்

0 919

இந்தியா-ஜப்பான் நாடுகளின் கடலோரக் காவல்படைகள் இடையே 5 நாள் ஒத்திகை, சென்னை கடற்பகுதியில் தொடங்கியுள்ளது.

சயோக்-கய்ஜின் (Sahyog-kaijin) என்று அந்த ஒத்திகைக்கு பெயரிடப்பட்டுள்ளது. அதில் ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான எசிகோ (Echigo) கப்பலும், இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான 4 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்று மீட்பு பணி உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகளை நடத்தி வருகின்றன.

ஒத்திகை வரும் திங்கள்கிழமை வரை 5 நாள்கள் நடத்தப்பட இருக்கிறது. இந்தியா -ஜப்பான் நாடுகளின் கடலோரக் காவல்படைகள் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments