தீவிரவாதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்ற DSP-யிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
தீவிரவாதிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்ல முயன்று கைது செய்யப்பட்ட காஷ்மீர் டி.எஸ்.பி தாவீந்தர் சிங்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஹூண்டாய் காரில் 2 தீவிரவாதிகள் மற்றும் வழக்கறிஞர் ரஃபி அகமது ஆகியோருடன் டெல்லி நோக்கி சென்றுக் கொண்டிருந்த தவீந்தர் சிங்கின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதையடுத்து அவரும் நவீத் பாபு, ஆசிப் அகமது ஆகிய இரண்டு முக்கிய ஹிஸ்புல் முஜாயீதீன் தீவிரவாதிகளும் வழக்கறிஞரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டில் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்திற்காக தூக்கில் இடப்பட்ட அப்சல் குருவும் தமது வாக்குமூலத்தில் தவீந்தர் சிங் பெயரை தமது வழக்கறிஞரிடம் கூறி அவர் உதவியை நாடியதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments