கருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி..! நீர் வளம் வாழ்வு தரும்

0 1088

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தை பிறப்பு அரிதான நிகழ்வாக மாறி போனதற்கு  நீரை மாசுபடுத்தியதே காரணம் என்று நடிகர் கார்த்தி வேதனை தெரிவித்தார். உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் காலிங்கராயன் வாய்க்காலில் முளைப்பாரி விட்டு விவசாயத்தின் மகத்துவம் குறித்தும் இளைஞர்கள் மத்தியில் எடுத்து கூறினார்.

ஈரோடு மாவட்டம் காலிங்கராயம் வாய்க்காலில் முளைப்பாரி விடும் நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற நடிகர் கார்த்தி , வாய்க்காலில் முளைப்பாரி விட்டார்.அவருடன் மகள் மற்றும் மனைவியும் முளைப்பாரி விட்டு வணங்கினர். நீர் நிலைகளை மேம்படுத்துவது குறித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

நீர் நிலை மேலாண்மை குறித்து விரிவாக பேசிய கார்த்தி, காலிங்கராயன் வாய்க்கால் அமைத்த காலிங்கராயரின் பெருந்தன்மையை போற்றினார். ஆரோக்கியத்தை காட்டிலும் மிகப்பெரிய சொத்து வேறு இல்லை என்ற கார்த்தி, நீர் நிலைகளில் கழிவுகளை கலக்கவிடுவதால் குழந்தை பிறப்பு என்பதே அரிதான நிகழ்வாக மாறிப்போனதாக வேதனை தெரிவித்தார்.

 நடிகர் கார்த்தி போன்று மற்ற முன்னனி நடிகர்களும், இளைஞர்களும் விவசாயம் மற்றும் நீர் நிலை மேம்பாடு குறித்து மக்களிடம் நல்ல கருத்துக்களை எடுத்துச்சென்றால் எல்லாம் மாறும் என்று நம்புவோம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments