பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி

0 1328

ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் அறிவித்துள்ளார்.

விஜயவாடாவில் இரு கட்சி தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் பேசிய பவன்கல்யான், ஆந்திர மக்களின் நலனுக்காக, பாஜகவுடன கூட்டணி அமைத்திருப்பதாக கூறினார்.

2024 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றும் விதத்தில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஜாதி அரசியலுக்கு எதிராக தங்கள் கூட்டணி செயல்படும் என்று தெரிவித்த பவன்கல்யாண், 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் ஜெகன்மோகனின் முடிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments