தொலைதொடர்பு நிறுவனங்களின் சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
தொலை தொடர்பு நிறுவனங்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சேவை மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமின்றி வாடகை, சொத்துக்களை விற்பது ஆகியவற்றின் மூலமாக கிடைக்கும் வருமானமும் மொத்த வருமானத்தில் கணக்கிட்டு உரிம கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதற்கு எதிராக தொடர்ந்த மனுக்களை ஏற்கனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் அந்த உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
Comments