ஆம் ஆத்மி அரசின் அலட்சியத்தால்தான் நிர்பயா வழக்கு கைதிகளின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் - பிரகாஷ் ஜவ்டேகர்
டெல்லி ஆம் ஆத்மி அரசின் அலட்சியத்தால் நிர்பயா வழக்கு கைதிகளின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் குற்றம் சாட்டி உள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்பயா பாலியல் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை கடந்த 2017 ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டதை சுட்டிக்காட்டினார். இவர்களை தூக்கிலிடுவதற்கு இவ்வளவு கால தாமதம் ஆகி இருக்காது என்ற அவர், நீதி தாமதிக்கப்படுவதற்கு ஆம்ஆத்மி தான் பொறுப்பு என்றார்.
குற்றவாளிகளின் கருணை மனுக்கள் மீது கடந்த இரண்டரை ஆண்டுகளாக டில்லி அரசு நோட்டீஸ் அனுப்பாமல் இருந்தது ஏன்என அவர் கேள்வி எழுப்பினார்.
Comments