7 பேருக்கு வாழ்வளித்த மூளை சாவு அடைந்த இளைஞர்

0 1437

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள், 7 பேருக்கு வாழ்வளிக்கும் வகையில் தானம் செய்யப்பட்டுள்ளது.

காந்திநகரை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் பணிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் மூளை சாவு அடைந்ததார்.   இதையடுத்து பெற்றோர்களின் அனுமதியுடன் அவரது கண்கள், இதயம், கணயம் போன்ற 8 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே அவரது நண்பர்கள் சார்பில் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments