பிரபல கன்னடம், தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் ரெய்டு

0 1911

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

கிரிக் பார்ட்டி என்ற கன்னடப் படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு ஆகிய இரு மொழி திரைத்துறையிலும் பிரபலமாக விளங்கி வருகிறார்.

தற்போது தமிழில கார்த்திக்கு ஜோடியாக பெயரிடப்படாத படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் உள்ள ராஷ்மிகா மந்தனாவின் வீட்டிலும் அவரது தந்தையின் திருமண மண்டபத்திலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பெங்களூரில் இருந்து 3 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ராஷ்மிகா மந்தனா தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அவரது வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments