தம்மிடம் தெரிவிக்காமல் கேரள அரசு உச்ச நீதிமன்றம் சென்றதாக ஆளுநர் குற்றச்சாட்டு
தம்மை கலந்து ஆலோசிக்காமலும், ஒரு நாகரீகத்திற்காக கூட தகவல் தெரிவிக்காமலும், கேரள அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திற்கு சென்று விட்டதாக, மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் கடுமையாக சாடி உள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கேரள அரசு, அடுத்த கட்டமாக, இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அரசியலமைப்பின் படி மாநிலத்தின் தலைவராக இருக்கும் தம்மிடம் இது குறித்து கேரள அரசு முன்னதாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கொந்தளித்துள்ள மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், மாநில அரசு, அரசியல் நெறிமுறைகளை மீறி விட்டதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநருக்குத் தெரியாமல் இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க மாநிலத்திற்கு அதிகாரம் உள்ளதா எனபதைப் பற்றி ஆராய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Comments