துணைநிலை ஆளுநருக்கு முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்க சவால்

0 877

தன் மீதான நில அபகரிப்பு குற்றச்சாட்டை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிரூபித்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

கடந்த வாரம் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது மகன் நில அபகரிப்பு ஊழலில் ஈடுபடதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு புகார் அளித்துள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ஆதாரங்கள் இல்லாத தன் மீதான குற்றச்சாட்டை துணைநிலை ஆளுநர் நிரூபித்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும், அவ்வாறு குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால் கிரண்பேடி பொது வாழ்வில் இருந்து விலக தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments