176 பேரை பலி கொண்ட ஏவுகணை தாக்குதல் தொடர்பான புதிய வீடியோ

0 917

176 பேரை பலி கொண்ட சம்பவத்தில், ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான பிறகும் உக்ரைனை விமானம் வட்டமடித்து டெஹ்ரான் விமான நிலையத்திற்கு திரும்ப முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசிம் சுலைமானி கொலையைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டது. முதலில் தாக்கிய ஏவுகணை, தகவல் தொடர்புக்கான டிரான்ஸ்பான்டர்களை செயலிழக்கச் செய்துள்ளது.

இரண்டாவது ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து விமானம் தீப்பிழம்பாக வானத்தில் வட்டமடித்து திரும்ப முயற்சித்துள்ளது. ஆனால் சில விநாடிகளில் தரையில் நொறுங்கி விழுந்துவிட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஈரான் ராணுவ தளத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டிடத்தின் மேல்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments