சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதி 4 பெண்கள் பலி

0 1243

தஞ்சை அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது, கார் மோதியதில் தாய்-மகள் உள்ளிட்ட 4 பெண்கள் உயிரிழந்தனர்.

வல்லத்தில் நடந்த ஒரு வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் அங்குள்ள சாலையில் நடந்து சென்றனர். திடீர் என்று அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த கார், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் மீது மோதியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி நின்றது.

இதில் நடந்து சென்ற கவிதா என்ற இளம் பெண் பலியானார். மேலும் காரில் பயணம் செய்த மூவர் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாய் மகளான செல்வி, கீர்த்தி, மற்றும் கன்னியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments