தீவிரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் டி.எஸ்.பி.யின் வீரதீர செயல் விருது பறிமுதல்

0 871

தீவிரவாதிகள் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் சிங்கிற்கு வழங்கப்பட்ட வீரதீர செயல் விருதை, பறிமுதல் செய்து விட்டதாக, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று குல்காம் மாவட்டத்தில் உள்ள மீர் பஜாரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் இரண்டு பேர் தப்பிச் செல்லும் முயற்சிக்கு உடந்தையாக இருந்த தேவேந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

நவீத், அல்தாப் என்ற இரண்டு தீவிரவாதிகளை தங்க வைத்திருந்த அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு, ஏகே 47 துப்பாக்கிகளும் ஏராளமான வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தேவேந்திர சிங்கிற்கு 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீரதீர செயலுக்கான காஷ்மீர் சிங்கம் போலீஸ் மெடலை பறிமுதல் செய்து விட்டதாக யூனியன் பிரதேச உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments