வாழ்நாள் அதிபராகிறார் புதின்?

0 1184

வாழ்நாள் முழுதும் தாம் அதிபராக இருக்கும் வகையில் ரஷ்யாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த அதிபர் விளாதிமிர் புதின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்ய அரசியலமைப்பு விதிகளின் படி ரஷ்யாவில் ஒருவர் 2 தடவைக்கு மேல் தொடர்ச்சியாக அதிபர் பதவியை வகிக்க முடியாது. இப்போது அதிபராக இருக்கும் புதினின் பதவிக் காலம் வரும் 2024 ல் முடிகிறது. 

நேற்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாடாளுமன்றம், பிரதமர் பதவி, ஸ்டேட் கவுன்சில் ஆகியவற்றின்அதிகாரங்களை விரிவுபடுத்த உள்ளதாக கூறியுள்ளார். இந்த ஸ்டேட் கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்று அதை ரஷ்யாவின் உச்சபட்ச அதிகார மையமாக மாற்றுவதே புதினின் திட்டம் என்று கூறப்படுகிறது.

இந்த த் திட்டத்தின் முதல் கட்டமாக பிரதமர்  திமித்ரி மெட்வதேவ் ராஜினாமா செய்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ள ரஷ்ய அரசியல் விமர்சகர்கள், புதின் தேர்தல் வாயிலாக இந்த மாற்றங்களை அமல்படுத்தும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர்களின் வழிமுறையில், வாழ்நாள் அதிபராக புதினும் மாறுவார் என கூறப்படுகிறது.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments