பயணிகளை விட செல்போனே முக்கியம்.. தனியார் பேருந்து ஓட்டுநர் அடாவடி..!

0 2123

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் பேருந்து ஓட்டுநர் செல்போனை பார்த்தபடி பேருந்தை இயக்கி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் வழியாக செந்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தை ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது அவர் தனது செல்போனில் பேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ் ஆப் (Whatsapp) பார்த்தப்படி பேருந்தை இயக்கினார்.

போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்டு, பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து பயணிகள், ஓட்டுநர் ராமகிருஷ்ணனை கண்டித்துள்ளனர்.

இதை சற்றும் கண்டு கொள்ளாத அவர் செல்போனை பார்த்தப்படி தொடர்ந்து 20 நிமிடங்கள் மேலாக பேருந்தை இயக்கி உள்ளார். இதனை தனது செல்போனில் படம்பிடித்த பயணி ஒருவர் இணையத்தில் பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments