கட்டிட வேலைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
தென்னாப்ரிக்க தலைநகர் கேப்டவுனில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கும் நோக்கில், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டிட வேலைகளில் பயன்படுத்தி வருகிறது.
வேஸ்ட்-ஈடி என்கிற இந்த அமைப்பானது அப்பகுதியில் உள்ள பொது இடங்கள் மற்றும் கடைகளில் இருந்து, பிளாஸ்டிக் பாட்டில்களை சேமித்து அதில் பிளாஸ்டிக் குப்பைகளை நிரப்புகிறது.
பின்பு, மரப்பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சட்டம் போன்ற அமைப்பிற்குள் பிளாஸ்டர், களிமண் போன்றவற்றை வைத்து, அதற்கிடையே பாட்டில்களை அடுக்கி வெவ்வேறு அளவுகளில் சுவர்களை வடிவமைக்கின்றனர்.
Comments