மகாராஷ்டிராவில் 350 அடி உயர பிரம்மாண்ட அம்பேத்கர் சிலையை திறக்க திட்டம்

0 1168

மகாராஷ்டிராவில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 350 அடி உயரத்திற்கு, அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலை நிறுவப்படும் என மராட்டிய அரசு தகவல் வெளியிட்டிருக்கிறது.

மும்பை தாதரில் உள்ள இந்து மில் பகுதியில், சட்டமேதை அம்பேத்கருக்கு மராட்டிய அரசு பிரமாண்ட நினைவகம் கட்டுகிறது. 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருக்கும் அம்பேத்கர் நினைவகத்தின் மேற்பகுதியில், பிரமாண்ட அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது.

இந்நிலையில், இந்த கட்டுமான பணிகளை மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசு விரைவுப்படுத்த முடிவெடுத்திருக்கிறது. இதுகுறித்து பேசிய மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், ஏற்கனவே 250 அடியில் அம்பேத்கர் சிலை அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அது தற்போது 350 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments