பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 819

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2020 - 2021ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

ஜனவரி 31-ல் தொடங்கும் நாடாளுமன்ற முதற்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ல் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

நிலைக்குழுக்கள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியங்களுக்கான கோரிக்கைகளை பரிசீலிக்கவும், அவற்றின் அறிக்கைகளைத் தயாரிக்கவும் உதவும் வகையில், நாடாளுமன்றம் பிப்ரவரி 11 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து ஏப்ரல் 3-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments