உன்னாவ் இளம்பெண் பலாத்கார வழக்கு: தண்டனையை எதிர்த்து முன்னாள் பாஜக எம்எல்ஏ மேல்முறையீடு

0 1050

உத்திரபிரதேசத்தில், உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தனது தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை, குல்தீப் செங்கார் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு உத்தர பிரதேசத்தின் உன்னாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

அதன்பின், 3 மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குல்தீப் செங்காரை குற்றவாளி என தீர்ப்பளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments