தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்....

0 2908

மிழ்நாட்டில், அறுவடைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

உழவுக்கு உயிரூட்டும் காளைகளையும், கோமாதாவாக விளங்கும் பசுக்களுக்கும் சிறப்பு வழிபாடுகளுடன், பொங்கல் படையலிட்டு, மரியாதை செய்யப்படுகிறது.

பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உறுதுணையாக விவசாயிகளின் குடும்பத்தில் ஐக்கியமாகி விட்டவை கால்நடைகள்.

உழவுக்கு உயிரூட்டும் மாடுகளுக்கும், பால் உற்பத்திக்காகவும், எரு தீவனங்களுக்காகவும் வளர்க்கப்பட்டு பரமாரிக்கப்படும் பசுக்கள் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி மணியைக் கட்டிவிட்டு மாடுகளை நீராட்டி சீராட்டி அலங்கரித்து ஊர்வலமாகக் கொண்டு சென்று சிறப்பு வழிபாடுகளுடன் அவற்றிற்கு மரியாதை செலுத்துவர்....

ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் மூலம் தமிழர்களின் வீரத்துடன் மாடுகள் மீதான மனிதர்களின் பாசமும் இணைந்திருப்பதுதான் பொங்கலின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments