எஸ் ஐ வில்சன் வழக்கு - பயங்கரவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் அதிகாரி வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் இருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டு கொன்று விட்டு தப்பிய பயங்கரவாதிகள் தவுபீக்,அப்துல் சமீம் ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் போலீசார் கைது செய்தனர். அவர்களை இருவரையும் கன்னியாகுமரியில் இருந்து சென்ற தமிழக போலீசாரிடம், கர்நாடக போலீசார் ஒப்படைத்தனர் இவர்களை இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையிலான 20 போலீசார் கொண்ட குழு அங்கிருந்து அழைத்து கன்னியாகுமரி மாவட்டம் கொண்டு வருகிறார்கள்.
நாளை காலை 2 பேரையும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த உள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தெரிவித்து உள்ளார்.
Comments