ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய சீனா

0 1474

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை சீனா மீண்டும் எழுப்பியது.

ஆப்பிரிக்க நாடு ஒன்றின் விவகாரம் தொடர்பாக விவாதிக்க நியூயார்க்கில் மூடிய அறைக்குள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அந்த கூட்டத்தில், இந்தியாவிற்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்பி உள்ளது. 

பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற உறுப்பு நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், சீனாவின் முயற்சி தோல்வியடையும் என கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கடந்த மாதமும் சீனா பிரச்சனையை எழுப்பியது. அப்போது பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் சம்மதிக்காதால் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments