உயிருள்ள மைக்ரோ ரோபாட்டை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்
உலகின் முதலாவது உயிருள்ள ரோபாட்டை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
செனோபோட் (xenobot) என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறு ரோபாட், தவளையின் கருவுற்ற முட்டையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
தவளையின் இரண்டு விதமான செல்களை இணைத்து அவை இயங்கும் வகையிலான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவை வழக்கமான ரோபாட்டுகளும் அல்ல, இயல்பான உயிரினமும் அல்ல என்று விளக்கம் அளித்துள்ள விஞ்ஞானிகள், இது நமது விருப்பத்திற்கு ஏற்ப புரோகிராம் செய்யக்கூடிய ஒரு உயிருள்ள படைப்பு என்று கூறி உள்ளனர்.
மனித உடலில் நுண்ணிய வகையில் மருந்துகளை செலுத்தவும், கதிரியக்கம் மிக்க கழிவுகளை அகற்றவும், ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கவும் இந்த ரோபாட்டுகள் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இடப்பட்ட உத்தரவை நிறைவேற்றிய பின்னர் சாதாரண உயிர் செல்களைப் போல இவை 7 நாட்களுக்குள் அழிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments