எஸ் ஐ வில்சன் கொலையில் பிடிபட்ட இருவர் குமரி போலீசிடம் ஒப்படைப்பு என தகவல்
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கர்நாடாகாவில் கைதான இருவரும் விசாரணைக்காக குமரி மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வில்சன் படுகொலை தொடர்பாக அப்பகுதி சிசிடிவி காட்சியில் பதிவான தவுபீக், அப்துல் சமீம் ஆகியோரது புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இருவரையும் உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து அம்மாநில போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் விசாரணை அதிகாரியான குமரி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் மற்றும் தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய பின்பு தமிழகம் மற்றும் கேரளாவில், இருவரும் குற்றங்களில் ஈடுபட்ட பகுதிகளுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக பிடிபட்ட இருவரும், கர்நாடக போலீசாரிடம், ஆயுத கடத்தலை, உதவி ஆய்வாளர் வில்சன் தடுக்க முயன்றதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது
Comments