ஸ்ரீதியாகராஜரின் 173 ஆம் ஆண்டு ஆராதணை விழா - பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி

0 807

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நடந்த பஞ்சரத்தின கீர்த்தனையில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் 173 ஆம் ஆண்டு ஆராதனை விழா கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்வாக, இன்று நடந்த பஞ்சரத்தின கீர்த்தனையில் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

தியாகராஜர் சமாதி முன்பு அவருக்கு பிடித்த நாட்டை, கவுனை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் ஆகிய ஐந்து ராகங்களில் கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர். இதில் சுதா ரகுநாதன், மஹதி உள்ளிட்டோரும் பங்கேற்று பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments