ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் ட்விட்டரில் கோரிக்கை
கடந்த மாதம் 6 ஆம் தேதி ஃபுளோரிடா கடற்படை தளத்தில் 3 பேரை சுட்டுக் கொன்ற சவூதி ராணுவ பயிற்சி அதிகாரியின் ஐ.போன்களை அன்லாக் செய்யுமாறு ஆப்பிள் நிறுவனத்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஃபுளோரிடாவில் உள்ள பென்சாகோலா கடற்படை விமான தளத்தில் இந்த தாக்குதலை நடத்திய முகம்மது அல்ஷம்ரானி அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலின் பின்னணியில் தீவிரவாத சதி உள்ளதாக அமெரிக்கா விசாரணை நடத்துகிறது.
இந்த நிலையில் கொல்லப்பட்ட முகம்மது அல்ஷம்ரானியின் இரண்டு ஐ போன்களை அன்லாக் செய்து தருமாறு ஆப்பிள் நிறுவனத்திற்கு டுவிட்டர் வாயிலாக டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்க ஏற்கனவே மறுத்து விட்ட ஆப்பிள் நிறுவனம், வேண்டுமானால் இந்த போன்கள் வாயிலாக கிளவுட் ஸ்பேசில் சேமிக்கப்பட்ட ஏராளமான தகவல்களை தந்து உதவுவதாக கூறி உள்ளது.
Comments