மைக்கேல் ஜாக்ஸன் போன்று டிக்டாக்கில் நடனமாடிய இளைஞர் -ஹ்ரித்திக் ரோஷன் வாழ்த்து
பொழுதுபோக்கு வலைதளமான டிக் டாக்கில் அச்சு அசலாக மைக்கேல் ஜாக்ஸன் போல நடனமாடியவருக்கு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பாபாஜாக்ஸன் 2020 என்ற பெயரில் இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்தார். மைக்கேல் ஜாக்ஸன் போலவே மூன்வாக் போலவும், நுனி விரல்களால் நடந்து சென்றும் நடனமாடினார்.
அடுத்த சில மணி நேரத்தில் வைரலான இந்த வீடியோவை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். பாபாவின் நடனத்தைப் பார்த்த, நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், யார் இந்த இளைஞர் என்று கேள்வி எழுப்பி, தயவு செய்து இந்த நபரை பிரபலமாக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அமிதாப் பச்சன், பிரபுதேவா, சுனில் ஷெட்டி நடன இயக்குநர் ரெமோ டிசோசா உள்ளிட்ட பிரபலங்களும் அந்த இளைஞருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
Comments