ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணை
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும், ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏராளமானோர் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.
அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து உள்ளனர்.
இந்த உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
Comments