இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி

0 12195

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 74 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். இருவரும் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என இந்திய வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.

37.4 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டியது. வார்னர் 128 ரன்களுடனும், ஃபின்ச் 110 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments