சட்ட விரோதமாக டாலர்களை கடத்த முயன்ற சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

0 2522

சட்ட விரோதமாக ஒரு கோடியே 64 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை பாங்காக்கிற்கு கடத்த முயன்ற, 3 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த அபுபக்கர், அப்துல் காதர், பிரோஸ் ஆகியோர் விமான நிலையதிற்கு வந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளை நெருங்கியபோது பதற்றமாகவும், அவசரமாகவும் செல்ல முயன்றனர். இதை கண்ட சுங்கதுறை அதிகாரிகள், அவர்களை தனியாக அழைத்து சென்று அவர்களை பரிசோதித்தனர்.

அப்போது அவர்களது பைகளில் ரகசியமாக மறைத்து வைத்திருந்த, கட்டு கட்டான அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூவரையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், விமான நிலையத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பணத்தை கொடுத்ததாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments