ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து அமெரிக்க வீரர்கள் உயிர் தப்பியது எப்படி?
ஈராக்கிலுள்ள விமானப்படை தளத்தில் கடந்த வாரம் ஈரான் புரட்சிப்படையினர் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உயிர் தப்பியது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் அமெரிக்க படை வீரர்கள் தங்கியிருந்த அல் அசாத் விமானப் படை தளம் மீது கடந்த 8 ஆம் தேதி அதிகாலை 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
உளவுத்துறை எச்சரிக்கையால் மூன்றரை மணி நேரத்திற்கு முன்பே உஷார் ஆன அமெரிக்க படையினர், சதாம் உசேன் காலத்தில் உருவாக்கப்பட்ட பதுங்கு குழிகளில் பல மணி நேரமாக இருந்தனர். ஆளில்லா விமானத்தை இயக்குவது போன்ற ஒரு சில பணிகளுக்கான வீரர்களே வெளியே இருந்தனர். அதன் காரணமாகவே உயிர்சேதமின்றி அதிசயமாக அமெரிக்க வீரர்கள் தப்பியுள்ளனர்.
Comments