தப்பான ஆட்டம் 21 நடிகைகள் கைது..! செய்தியாளர் மீது பாய்ச்சல்

0 2716

ஐதராபத் கிளப் ஒன்றில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அரை நிர்வானமாக நடனமாடிய தெலுங்கு சினிமா துணை நடிகைகள் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கிளப் ஒன்றில் தெலுங்கு திரை உலகை சேர்ந்த துணை நடிகைகளை அழைத்து வந்து அரைகுறை ஆடையுடன் ஆடவைப்பதாக ஹூபிளி ஹில்ஸ் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறையினர் அதிரடியாக நுழைந்ததும் நிகழ்ச்சிக்கு நடிகைகளை அழைத்து வந்த புரோக்கர் பிரசாத், மற்றும் கிளப் உரிமையாளர் மற்றும் நடனத்தை ரசிக்க வந்திருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அரைகுறை உடையுடன் ஆடிக் கொண்டிருந்த 21 நடிகைகள் தப்பி ஓட இயலாமல் அங்கேயே சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் ஆடைகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்து காவல்துறையினர் 21 நடிகைகளையும் கைது செய்தனர்.

முகத்தை மூடியபடி வந்த நடிகைகள் அனைவரையும் அவர்கள் நடனம் ஆடுவதற்காக வந்த மினி பேருந்தில் ஏற்றி ஹூபிளி ஹில்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பேருந்தில் இருந்து தங்களது மூட்டை முடிச்சிகளுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட போது முகத்தை மறைந்திருந்த நடிகை ஒருவர், தங்களை படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளரை தாக்கினார். அத்தோடு அவர் கையில் வைத்திருந்த கேமராவையும் தட்டிவிட்டார்

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அந்த நடிகையை எச்சரித்து காவல் நிலையத்துக்குள் அழைத்து சென்றனர். இது போன்ற தப்பான நடனங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மதுவுடன் கேளிக்கை விடுதி நடத்துவோர், நடிகைகளை அழைத்து வந்து அரையும் குறையுமாக நடனம் ஆட வைத்து லட்சங்களை குவித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதே போல சென்னை அண்ணா சாலையில் சாந்தி திரையரங்கம் அருகே உள்ள அடுக்குமாடி வணிகவளாகம் உள்ளிட்ட இரு இடங்களில் கலாச்சார நடனம் என்ற பெயரில் இளம் பெண்களை ஆடவிட்டு அவர்கள் மீது பணத்தை வீசியும், பணத்துடன் செல்போன் எண்களையும் எழுதி கொடுத்து தவறான செய்கைக்கு அழைக்கும் நடன நிகழ்ச்சி ஒன்று நீண்ட நாட்களாக அரசியல் செல்வாக்குடன் அரங்கேறி வருகின்றது.

திருவல்லிக்கேணி காவல்துறையினர் பலமுறை முயன்றும் அந்த விவகார நடனத்தை தடைசெய்ய இயலவில்லை என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments