முதலமைச்சர் தலைமையில் ஜன.20ல் அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நடப்பாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம், வருகிற 20ஆம் தேதி, மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய அம்சங்கள் குறித்தும், தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச்சாளர அனுமதி, முதலீடு உள்ளிட்டவை குறித்தும், விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பட்ஜெட்டில், துறைவாரியாக வெளியிடப்படும் புதிய அறிவிப்புகள், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் பற்றியும், அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட மாநில பாதுகாப்பு பற்றியும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Comments